Dec 20, 2011

ENMAC -இஸ்லாமியர்களுக்கான மொபைல் போன்






சென்ற நவம்பர் இறுதி வாரத் தில், டில்லியில் இஸ்லாமியர் களுக்கான மொபைல் போனாக குரான் மொபைல் என்மேக் க்யூ 3500 என்ற போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கான டிஜிட்டல் சாதனங்களைத் தயாரித்து உலக அளவில் வழங்கி வரும் என்மேக் நிறுவனம் இதனை வடிவமைத்து வழங்கியுள்ளது. 
இந்த போன் ஏற்கனவே பாகிஸ்தான், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஏன் அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக விற்பனை ஆகி வருகிறது. 
இதன் சிறப்பம்சம் என்னவெனில், இந்த போனில் புனித குரான் உரையை படிக்கவும் கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் இயங்கும் இந்த மொபைல் போனில் கூடுதலாக 31 இஸ்லாமிய நூல்களின் உரையும் கிடைக்கிறது. அரபிய மொழியில் சிறந்த எழுத்துருவில் இந்த நூல்கள் தரப்பட்டுள்ளன. தொழுகை நடத்தும் வேளைகளில் தானாக சைலன்ட் மோடிற்கு இந்த போன் மாறிக் கொள்கிறது. இதனுடன் தரப்படும் திசை காட்டி, உலகின் எந்த மூலையில் இருந்தாலும், மெக்கா நகரம் இருக்கும் திசையைக் காட்டும். 
மேலும் 29 மொழிகளில் (தமிழ், உருது, ஆங்கிலம், வங்காளம் மற்றும் மலையாளம் உட்பட) மொழி பெயர்ப்பு செய்யப்பட்டும் புனித குரான் இதில் தரப்பட்டுள்ளது. வேகமாக இயங்கும் இந்நாட்களில், இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மதக் கடமை ஆற்றுவதை நினைவு படுத்த இந்த போன்களை வாங்கி அளித்து வருகின்றனர். 
இதில் உள்ள புனித குரான் மற்றும் பிற மதக் கோட்பாட்டு நூல்களைப் படித்து, குறிப்பிட்ட இடத்தில் அடையாளக் குறியீடு செய்து வைக்கலாம். இதன் மூலம், படித்து முடித்த இடத்திலிருந்து மீண்டும் தொடர்ந்து படிக்க முடிகிறது.
இதில் தரப்படும் அப்ளிகேஷன்களும் விசேஷமானவை. ஸகட் கால்குலேட்டர், டஸ்பி கவுண்ட்டர், ஹஜ் வழிகாட்டி ஆகிய அப்ளிகேஷன்கள் இஸ்லாமியர்களின் மத நடைமுறைகளுக்கு உதவுகின்றன.
TolMol.com என்ற இணைய தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். ரூ.3,950 விலையிடப் பட்டுள்ள இந்த மொபைல் போன் தற்போது ரூ.2,999 க்குக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment