நேசம் கொண்ட இரு உறவுகளிடையே பிரிவு வருவது எப்பொழுது? ஒருவரிடத்தில் பொய், நம்பிக்கைத் துரோகம், சந்தேகம் மற்றும் சுயநலம் தலைதூக்கும் போது அங்கு பிரிவு நிச்சயமாகி விடுகிறது. இருவருமே இப்படி இருந்தால் பிரிவு அவசியமில்லை எனினும் ஒருவர் மட்டும் இப்படியான தீய நடத்தைகளோடு இருக்கும்போது, இருப்பதை மற்றவர் காண நேரிடும்போது காந்தத்தின் துருவங்கள் போல நேசத்திலிருந்தும் தள்ளப்பட்டு தூரமாகி விடுகின்றனர்.
இனி வாழ்நாள் முழுதும் பிரியவே போவதில்லையென்ற மன உறுதியோடு இணைந்த உள்ளங்களில் கூட ஒருவரிடத்தில் இப்படியான நடத்தைகளைக் காணும்போது, முதலில் விட்டுக் கொடுத்துப் பார்த்து, அந்தக் குறைகளைச் சுட்டிக் காட்டி அவரைத் திருத்த முயற்சிக்கலாம். அவர் திருந்துவதற்கான எந்த அறிகுறிகளோ, சாத்தியமோ இல்லையெனத் தெரிகிற போது அவரை விட்டும் விலகிப் போய்விடலாம்.
இன்றைய காலத்தில் பல திருமணங்கள், நட்புகள், நேச உறவுகள் இதனாலேயே உடைந்துபோகின்றன. பல வாழ்க்கைகள் சின்னாபின்னமாகின்றன. ஆகவே ஒரு உறவை, வாழ்க்கை முழுவதற்குமெனத் தேர்ந்தெடுக்கும்போது அவரது குறைகளை முதலில் தெரிந்துகொள்வது சிறந்தது. அவற்றைத் திருத்த முடியுமா என சிந்தித்து உறவைத் தொடர்வது நல்லது. முடியாவிடில் உடனடியாக விட்டுவிலகுவது, பிறகு வரக் கூடிய பல மனச் சிதைவுகளைத் தவிர்க்கச் செய்யும்.
கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
தூய்மையான அன்புடனான ,நீடித்த உறவுக்கு உடல் குறைபாடென்பது எந்தத் தடையுமில்லையென்பதை இப் படங்கள் உணர்த்தும்.
அஹ்மத் (26 வயது) மற்றும் அவரது மனைவி பாத்திமா (25 வயது) இருவருமே உடலளவில் குறைபாடுகளுடையவர்கள். அஹ்மதுக்கு இரு கைகளும், பாத்திமாவுக்கு இரு கால்களும் பிறவியிலிருந்தே இல்லை.
ஆனால் இருவரும் இணைந்து ஒற்றுமையாக கலை நுணுக்க வேலைப்பாடுகளில் சாதித்திருக்கிறார்கள். உடல் குறைபாடு அவர்களது தன்னம்பிக்கையையும், தைரியத்தையும், ஒற்றுமையையும் சிறிதளவேனும் தகர்க்கவில்லையென்பதை மேலுள்ள படங்கள் உணர்த்தும்.
வாழ்வில் சாதிக்கவேண்டுமெனில் வேறு எதுவுமே தேவையில்லை. முழுமையான நம்பிக்கை, தூய்மையான அன்பு, முயற்சி மட்டுமே போதும். வாழ்க்கை ஆயிரம் காரணங்களை நீங்கள் அழுவதற்காகத் தரும்போது, நீங்கள் புன்னகைக்க பல காரணங்களை வாழ்க்கைக்குக் கொடுங்கள்.
என்றும் அன்புடன்,

S.Sheik Abdullah

No comments:
Post a Comment