May 24, 2010

கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட 30 க்கு மேற்பட்ட மம்மிகளைக் கொண்ட பாரிய கல்லறை தொகுதியொன்றை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

கெய்ரோவின் தெற்கேயுள்ள சகாரா பிரதேசத்திலேயே இந்த மம்மிகளைக் கண்டு பிடித்துள்ளதாக மேற்படி அகழ்வாராய்ச்சிக்கு தலைமை தாங்கிய ஸாஹி ஹவாஸ் தெரிவித்தார்.


மேற்படி கல்லறைகளில் ஒன்று 4000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கருதப்படுகிறது. மேலும் அவற்றில் 22 மம்மிகள் கிறிஸ்துவுக்கு முன் 640 ஆம் ஆண்டைச் சேர்ந்தவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸாஹி தெரிவித்தார். கல்லறைகளின் சுவரில் காணப்பட்ட எழுத்து அடையாளங்கள் மூலமே அதன் காலத்தை கணிப்பிட்டதாக அவர் கூறினார்.

அத்துடன் மேற்படி கல்லறைத் தளத்தில் 8 மர மற்றும் கல்லாலான சவப்பெட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு சவப்பெட்டி பண்டைய காலம் முதற்கொண்டு ஒரு போதும் திறக்கப்படாமல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டைய எகிப்தில் 70 சதவீதமான சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக நம்புவதாக ஹவாஸ் கூறினார்.

No comments:

Post a Comment