May 20, 2010

பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்க

உங்கள் விண்டோஸ் இயங்குதளம் பழுதடைந்து விட்டதா? விண்டோஸ் பூட் ஆகவில்லையா? விண்டோஸ் சிடியை உபயோகித்து ரிப்பேர் செய்யலாம் என்று விண்டோஸ் சிடியில் பூட் செய்தால் ரிப்பேர் வசதி வரவில்லையா?

இனி பூட் ஆகாத கணினியிலிருந்து உங்கள் முக்கியமான கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது. இப்படி பூட் ஆகாத கணினியில், விண்டோஸ் லைவ் சிடி மூலமாக பூட் செய்து மீட்டெடுக்கலாம் ஆனால் இதே பணியை கட்டற்ற  இலவச மென்பொருளான உபுண்டு சிடியை உபயோகித்து எப்படி பேக்கப் எடுக்கலாம் என்று பார்க்கலாம்.

இதற்கு உங்களிடம் Ubuntu சிடி இருக்க வேண்டும், வேண்டுமானால் தரவிறக்கச் சுட்டி வலது புறம் உள்ளது. அதோடு பேக்கப் எடுக்க ஏதாவது எக்ஸ்டெர்னல் ட்ரைவ் அல்லது யுஎஸ்பி ட்ரைவ் தேவைப்படும்.

இப்பொழுது, உபுண்டு சிடியில் உங்கள் கணினியை பூட் செய்து கொள்ளுங்கள். இதன் திரையில் “Try Ubuntu without any change to your computer”. என்ற வசதியை தேர்வு செய்து கொண்டு பூட் செய்யவும்.



கணினி உபுண்டுவில் பூட் ஆன பிறகு, Places மெனுவில் Computer வசதியை கிளிக் செய்யவும்.



இந்த File Browser இல்  உங்கள் கணினியில்  உள்ள அனைத்து வன்தட்டு பிரிவுகளும் பட்டியலிடப்பட்டிருக்கும். இதில் உங்கள் விண்டோஸ் ட்ரைவை இரட்டை கிளிக் செய்யவும். விண்டோஸ் ட்ரைவ் திறந்துவிட்டால் உங்கள் வேலை சுலபம். தேவையான கோப்புகளை எக்ஸ்டர்னல் ட்ரைவில் காப்பி செய்து கொள்ளலாம்.



ஆனால் சில சமயங்களில் “Unable to mount the volume” என்ற பிழைச் செய்தி வரும். நீங்கள் இறுதியாக விண்டோஸ் இயங்குதளத்தை முறையாக ஷட்டவுன் செய்யாமலிருந்தால் இந்த பிழைச் செய்தி வரும்.



இந்த டயலாக் பாக்ஸில் உள்ள Details என்ற லிங்கை கிளிக் செய்து பாருங்கள். இதில் Choice 2 -இல் என்ன கொடுக்கப்பட்டுள்ளது என்று கவனியுங்கள். ஏதாவது பிழை வந்தாலும், அந்த ட்ரைவை திறப்பதற்கான டெர்மினல் கட்டளை கொடுக்கப் பட்டிருக்கும்.



சரி, இனி  Applications  மெனுவில்   Accessories -> Terminal விண்டோவிற்கு சென்று கீழே தரப்பட்டுள்ள கட்டளைகளை கொடுங்கள். (இதை செய்வதற்கு நீங்கள் Administrator மோடில், லினக்ஸ் மொழியில் Root இற்கு செல்ல வேண்டும், இதற்கு கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்)

sudo /bin/bash
இனி விண்டோஸ் ட்ரைவ் மவுன்ட் ஆவதற்காக ஒரு டைரக்டரியை உருவாக்க வேண்டும்.

mkdir /media/disk
இப்பொழுது கீழே உள்ள கட்டளையை உங்கள் வன்தட்டிற்கு ஏற்றவாறு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். அதாவது இந்த கட்டளையில் தரப்பட்டுள்ள /dev/sda1 என்பது எல்லா கணினிக்கும் பொதுவானதல்ல. முன்பு வந்த எர்ரர் விண்டோவில் தரப்பட்டிருந்ததை கொடுங்கள். இந்த கட்டளையானது, பிரச்சனையுள்ள பார்ட்டீஷனையும் மவுன்ட் செய்ய முயற்சிக்கும்.


mount -t ntfs-3g /dev/sda1 /media/disk -o force
உங்கள் விண்டோஸ் ட்ரைவ் NTFS அல்லாமல் FAT32 ஆக இருந்தால் இதற்கு பதிலாக கீழே உள்ள கட்டளையை கொடுங்கள்.

mount -t vfat -o umask=000 /dev/sda1 /media/disk


இனி உங்கள் விண்டோஸ் ட்ரைவ் உபுண்டு டெஸ்க்டாப்பில் வந்திருக்கும்.


உங்கள் எக்ஸ்டர்னல் ட்ரைவை செருகுங்கள், இது தானாகவே டெஸ்க்டாப்பில்  வந்துவிடும்,  இனி விண்டோஸ் ட்ரைவிலிருந்து உங்களக்கு அவசியமான கோப்புகளை (முக்கியமாக Documents and Settings ஃபோல்டரில் உள்ள உங்கள் பயனர் ஃபோல்டர்) எக்ஸ்டர்னல் ட்ரைவிற்கு  காப்பி செய்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான்!

1 comment: